திங்கள், 11 ஏப்ரல், 2011

உங்கள் ஓட்டு யாருக்கு......

அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே!........




அடடே நம்ம தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வந்து விட்டது. ஒரு ஊர் திருவிழாவை போல கலைகட்ட தொடங்கி விட்டது, தொகுதிகள் எங்கும் தலைவர்களின் முற்றுகை, தெரிந்தவன் தெரியாதவன் என்று அனைவரையும் பார்த்து கும்பிடு போடும் வேட்பாளர்கள், தலைவர்களின் தேர்தல் அறிக்கைகள், எதிர்கட்சி ஆளும்கட்சி வசவுகள், கருத்துகணிப்புகள் என்று தமிழகமே தேர்தலை நோக்கி காத்திருக்கின்றது. வேட்பாளர்கள் தங்களுடைய இறுதிக்கட்ட பரப்புரையில் இருக்கும் தருணத்தில், நம் அனைவருக்கும் எழும் கேள்வி: யாருக்கு ஓட்டு போடுவது?

வாக்காளர்கள் பலரும் மாறி மாறி தி.மு.க, ஆ.தி.மு.க அணிகளுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றீர்கள். உங்களில் யாராவது நமது வாழ்க்கைத்தரம் உயராது தாழ்ந்து வருவது குறித்து சிந்தித்து இருப்பீர்களா?

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுவது, வேலையில்லாத் திண்டாட்டம், காவிரி நீர் பிரச்சனை, முல்லைப் பொரியாறு பிரச்சனை, பாலாற்று பிரச்சனை, ஓகேனக்கல் குடிநீர் திட்டம், நெசவாளர் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, ஊழல், ஈழத்தமிழர் பிரச்சனை,etc….. இப்படி ஏதேனும் ஒரு பிரச்சனைக்கு தீர்வு இந்த ஓட்டுப்பொருக்கிகளிடம் உள்ளதா? இவர்கள் ஆட்சிக்கு வந்து என்ன கிழித்தார்கள்?



வேட்பாளர்களின் இன்றைய நிலை:

வேட்பாளர்களின் இன்றைய நிலை தான் என்ன?

ஈழத்தில் புலிகளுக்கு எதிரான போர் என அறிவித்து, இலட்சக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்த இலங்கை அரசுக்கு உறுதுணையாக நின்று பண உதவியும், ஆயுத உதவியும் செய்த காங்கிரசு அரசு. தமிழகத்தில் காங்கிரசுக்கு துணையாக நின்ற தி.மு.க., மௌனமாக இருந்து ஆதரவு தந்த எதிர்கட்சிகள். இந்த நூற்றாண்டின் மிகப்பொரிய இனப்படுகொலைக்கு எதிராக எந்த வீரம்செரிந்த போராட்டமும் செய்யாத இந்த ஓட்டுப்பொருக்கிகள் தான் இன்று நம்முன்னே சிரித்த முகத்தோடு வாக்கு கேட்டு வருகிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தன்னிச்சையாக எழுந்த மக்கள் போராட்டங்களையும் நீர்த்து போக செய்த இந்த கேடுகெட்ட ஓட்டுப்பொருக்கிகளையா நாம் தேர்ந்து எடுக்க வேண்டும்? எதற்காக? எஞ்சி இருக்கும் நமது உரிமைகளையும், தன்மானத்தையும் இழக்கவா?



ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது எந்தவித குற்ற உணர்சியும் இல்லாது அமைதி காத்த ஓட்டுப்பொருக்கிகளை துரத்தியடிக்க வேண்டாமா? அடையாள போராட்டங்களையும் அறிக்கையையும் மட்டுமே பெரும் போராட்டமாக சித்தரித்து விளம்பரப்படுத்தி ஓட்டுப்பொருக்க மட்டுமே துடிக்கும் இவர்களா நமது பிரதிநிதிகள். இந்த ஓட்டுப்பொருக்கிகள் நமக்காக குரல்கொடுக்க போகிறார்களா?



தமிழர்களே! தமிழகத்தை அமைதி பூங்காவாக வைத்திருந்தது போதும், இனியும் அமைதி காத்தால் நம்மை புழுவென்று அழித்தொழித்து விடுவார்கள் இந்த சண்டாளர்கள். ஓட்டுக்காகவும், பதவிக்காகவும் நமது எல்லா அடையாளங்களையும் அடகு வைத்து விட்ட ஓட்டுப்பொருக்கிகளை வீழ்த்தாமல் நமக்கு எழுச்சியில்லை!




தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்!



நமது எதிர்ப்பை தேர்தலை புறக்கணித்து பதிவு செய்வோம்!!



தேர்தலை புறக்கணிபோம்! தேர்தலை புறக்கணிபோம்!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக