செவ்வாய், 27 ஜனவரி, 2009

ஈழம்

பற்றி எரியுது தமிழீழம்
தூங்கி விழுவதா தமிழகம்
நித்தம் நித்தம் வெடிச்சத்தம்
தினமும் பலநூறு உயிர்சேதம்

ஈழமண்ணில் பிணம் திண்ணும்
எறிகணைகள் அதை மலர்கணை
என காணாமல் இருப்பதோ?
இது இன படுகொலையினும்
விஞ்சிய கொடுமையன்றோ ?

கொத்துக் கொத்தாய் மடியும் தமிழ்மக்கள்
காட்டுக்குள் தஞ்சமென தத்தளிக்குது
இரத்த சகதியில் சிக்கி திணறுது
இறுதி மூச்சின் மரண ஓலம் அது
செவிடர்களா நாம் ?

நாடோடியாய் ஓரினம்
திரியுது அங்கே
நாடாள ஓட்டுப்பொருக்குது
குள்ளநரிகள் இங்கே

கலைஞரின் மனித சங்கிலி
திருமாவின் விரம்செரிந்த(?) உண்ணாவிரதம்
இராமதாசின் அறிக்கை போர்
இவை இக்கொடுமைகளை எதிர்த்த
போராட்டங்களா? கேளிக் கூத்துகளா?

ராடரும், ராணுவ உதவியும்
செய்யுது இந்தியா அதனிடமே
போரை நிறுத்தகோருவதா?

காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையை
நசுக்கும் இந்திய அரசு தமிழீழத்தின்
சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டும்
என்பது மூடத்தனம் இல்லையா?

இறந்த பெண் புலிகளையும்
மானபங்கம் செய்யும் சிங்கள
இராணுவ வெறிசெயலை எதிர்த்து
கிளர்ந்து எழாத தமிழக இளைஞர்களே

எத்துனைப் பேர் ஷில்பா செட்டிக்கு
நேர்ந்த அவமானத்துக்காக(!)
கொதித்து எழுந்தீர்கள்
இதுதான் இனப்பற்றா? மனிதப் பண்பா?

ஓட்டுப் பொறுக்கிகளின்
கோமாளித் தனங்களாளும்
இந்திய அரசிடம் வேண்டுவதாலும்
இன ஒழித்தலை தடுத்திட இயலுமா?
தனிநபர் சாகசங்கள் இதற்கு தீர்வாகுமா?

வீதியில் இறங்கி போராடத வரை
நாம் பெறப் போவது ஓன்றுமில்லை
உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட
ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்கள்
இன்றி வேறு தீர்வு எங்கும் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக